சசிகலாவால் 15 ஆண்டுகளாக துன்பத்தை அனுபவித்தேன் – பன்னீர்செல்வம்!
Monday, February 13th, 2017
அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் கூவத்தூர் விடுதியில் குண்டர்கள் காவலுக்கு இருப்பதாகவும் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியிருக்கிறார்.
கூவத்தூரில் சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்த சிறிது நேரத்திற்குப் பிறகு சென்னையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.க்கள் தமது தொகுதி மக்களின் மன நிலையை அறிந்த பிறகு தங்கள் ஆதரவு யாருக்கு என்பதை முடிவுசெய்ய வேண்டுமெனக் கூறினார்.
உள்துறை முதல்வர் வசம் இருப்பதால், அந்த எம்.எல்.ஏ.க்களை ஏன் காவல் துறை மூலம் மீட்கக்கூடாது என கேள்வியெழுப்பப்பட்டபோது, அசாதாரண சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் அம்மாதிரி நடவடிக்கையில் இறங்கவில்லையென்று கூறினார்.

Related posts:
சிரியாவில் ஐ.எஸ் நிலைகள் மீது துருக்கி தாக்குதல்!
சூறாவளி மற்றும் புயல் காரணமாக அமெரிக்காவில் 20 பேர் வரையில் உயிரிழப்பு!
ஜம்மு - காஷ்மீர் பஹல்கம் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்வர்களுக்கு யாழ்ப்பாணத்தில் நின...
|
|
|


