மண்டைதீவு பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆராய்வு!

Monday, February 6th, 2017

மண்டைதீவு பிரதேசத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள்கள் சென்று குறித்த பகுதி மக்களது நிலைமைகளை பார்வையிட்டதுடன் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தெடர்பாகவும் ஆராய்ந்தறிந்தகொண்டனர்.

இன்றையதினம் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) தலைமையில் சென்ற குழுவினர் குறித்த பகுதி மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த  சந்திப்பொன்றிலும் கலந்துகொண்டனர்.

கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் கடந்த காலங்களிலும் தற்போது முன்னெடுக்கப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள செயற்றிட்டங்கள் தொடர்பாக பிரதேசத்தின் மக்களுடன்  ஆராய்ந்தற்ந்துகொண்டதுடன் அவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்துகொண்டனர்.

இச்சந்திப்பின் போபோது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன், கட்சியின் வேலணை பிரதேச உதவி நிர்வாக செயலாளர்  ஞானமூர்த்தி (யசோ) மற்றும் பிரதேச நிர்வாக உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

1

Related posts:

ரணில் விக்ரமசிங்கவுக்கு பூகோளிய அரசியல் தொடர்பில் கருத்துரைக்கும் தார்மீக உரிமை கிடையாது - இராஜாங்க ...
இலங்கையில் நீரிழிவு நோயாளிகளே கொரோனா தொற்றால் அதிகம் உயிரிழந்துள்ளனர் - கொழும்பு தேசிய வைத்தியசாலை ...
பயங்கரவாதத்தைக் கையாளும் போது மனித உரிமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையே ஒரு நியாயமா...

இலங்கையில் உணவுப்பொருட்களிற்கு தட்டுப்பாடு என தெரிவிக்கப்படுவது முற்றிலும் தவறான செய்தி – அடியோடு நி...
இலங்கையில் அவசரகால சட்டம் நீக்கப்பட்டமை வரவேற்கத்தக்கது - ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிப்பு!
கடத்தலுக்கு எதிராக முன்னெடுத்த நடவடிக்கைகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு பெரும் அடியாக அமைந்தது ...