இலங்கைக்கு எலிசபத் மகாராணி, பிரதமர் மோடி வாழ்த்து!
Saturday, February 4th, 2017
அனைத்து இலங்கையர்களையும் வாழ்த்துவதாக இலங்கையின் 69 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபத் மகாராணி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களுக்கு எதிர்வரும் வருடம் சந்தோஷம் மற்றும் அதிர்ஷ்டம் மிக்க ஆண்டாக மலர வேண்டும் என்று பிராத்திப்பதாக பிரித்தானியாவின் 2வது எலிசபத் மகாராணி விடுத்துள்ள வாழ்த்து அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையின் 69 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இலங்கை, இந்தியாவிற்கு முக்கியமான நண்பர் என்பதுடன் அயல்நாடு என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

Related posts:
எதிர்வரும் வாரத்தில் மன்னார் மாவட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை -...
உலகிலேயே அதிகளவான சிறுவர் மணப்பெண்கள் தெற்காசியாவில் – யுனிசெஃப் தகவல்!
அஸ்வெசும இரண்டாம் கட்டம் 75,000 விண்ணப்பங்கள் ஏற்பு - பரிசீலனை நடவடிக்கைகள் ஆரம்பம் என சபையின் தலைவ...
|
|
|


