காணாமற்போனோர் விசாரணை எதிர்வரும் 25 ஆம் திகதி கிளிநொச்சியில்!

Saturday, April 23rd, 2016

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் வட மாகாணத்திற்கான இறுதிக்கட்ட அமர்வுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ளன.

வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களிலும் ஆணைக்குழு தனது சாட்சி விசாரணை அமர்வுகளை நிறைவுசெய்துள்ளது.

இதற்கமைய வடக்கிற்கான இறுதிக்கட்ட அமர்வு எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடத்தப்படவுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த சாட்சி விசாரணை அமர்வுகளில் சாட்சியமளிப்பதற்காக கரைச்சி, கண்டாவளை, பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவுகளில் காணாமற்போனோர் தொடர்பில் முறைப்பாடுகளை செய்துள்ளவர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

.

Related posts:

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் எவரையும் அரசியல் கைதிகள் என அடையாள...
நாட்டில் டெங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக...
பவபருவகால சீட்டை வைத்திருப்போரை பேருந்துகளில் ஏற்றிச் செல்ல மறுத்தால் கடும் நடவடிக்கை!

இந்த ஆண்டு இறுதிக்குள் 5 விமான நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளன – சுற்றுலாத்துறை...
எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் அரச செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜப...
வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் பணி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை - தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தியோ...