நீர்வேலி வடக்குப் பகுதியில் இருவரைத் தாக்கிக் காயப்படுத்திய குற்றச் சாட்டில் 11 பேர் கைது
Friday, April 22nd, 2016
நீர்வேலி வடக்குப் பகுதியில் இருவரைத் தாக்கிக் காயப்படுத்திய குற்றச் சாட்டில் அதே பகுதியைச் சேர்ந்த 11 பேரை கோப்பாய் பொலிஸார் நேற்று முன்தினம் 20 ஆம் திகதி புதன்கிழமை கைது செய்துள்ளனர் .
கடந்த மாதம் – 20 ஆம் திகதி இரவு விழிப்புக் குழுக் கடமையில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடாத்தியதுடன் அதே பகுதியினைச் சேர்ந்த பூசாரியொரொருவரின் வீட்டுக்குக் கல் எறிந்து குறித்த நபர்கள் அடவாடித் தனமான செயற்பாடுகளில் ஈடுபட்டனர். சம்பவத்தில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் இரு தரப்பிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான அனைவரையும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
மடு தேவாலயத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி!
10 பில்லியன் ஒதுக்கீட்டில் இம்முறை 66,000 மெ.தொ. நெல் கொள்வனவு - அமைச்சரவைக்கும் நிதி அமைச்சு பத்திர...
அடுத்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் நெருங்க வாய்ப்பு - வளிமண்டலவியல்...
|
|
|


