மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொலிஸாருக்கெதிராக 400 புகார்கள்!
Friday, January 13th, 2017
இலங்கை பொலிஸ் சேவைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு 400 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில் பெரும்பாலானவை, சித்திரவதை மற்றும் ஏனைய சட்ட விரோத நடவடிக்கைகள், தொடர்பானவை, இதுதவிர, இரகசியப் பொலிஸாருக்கு எதிராகவும் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் பல கிடைக்கப் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இரகசியப் பொலிஸார் சித்திரவதை முகாம் போன்று செயற்படுவதாகவும் அம்முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நான்காவது மாடி என அறிமுகமாகியுள்ள இரகசியப் பொலிஸ் பிரிவில், சித்திரவதை வழங்கப்படுவதாகவும், அதற்கான சாட்சிகள் பல உள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது

Related posts:
சீரற்ற காலநிலை - நாடு முழுவதும் 2 ஆயிரத்து 750 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரத்து 542 பேர் பா...
சிறுவர்கள் படுக்கைக்குச் செல்ல அரை மணி நேரத்திற்கு முன் அவர்களை கணினியிலிருந்து விலக்கி வைக்கவும்!
நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் நிரூபிக்கப்படும்வரை லொகான் ரத்வத்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது -...
|
|
|


