வடக்கின் சுகாதார அமைச்சருக்கு எதிராக வவுனியாவில் போர்க்கொடி!
Thursday, January 12th, 2017
வட மாகாண சுகாதார அமைச்சருக்கு எதிராக காணாமற்போனோரின் உறவினர்கள் வவுனியா கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி காணாமற்போனோரின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தின்போது, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனின் உருவப்படத்திற்கு தீ வைக்கப்பட்டது.
குறித்த சம்பவத்தை விசமிகளே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்தள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் கூறியதாகக் தெரிவித்து அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related posts:
புலிகளை வெல்ல 200 பில்லியன் டொலர் செலவு இந்திய முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்!
மீண்டும் படைப்புழுக்களின் தாக்கம் ஏற்படலாம் - சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை!
திருகோணமலை கடற்பரப்பில் இந்திய - இலங்கை கடற்படையினரின் கூட்டுப்பயிற்சி ஆரம்பம்!
|
|
|


