கரையோர பகுதிகளில் தென்னம் பிள்ளைகள் நாட்டல்!
Monday, January 2nd, 2017
பொம்மை வெளியை அண்டிய கரையோரங்களில் யாழ்.மாநகராட்சி மன்றம் தென்னம் பிள்ளைகளை நட்டுள்ளது. சுமார் நூறு வரையிலான தென்னம் பிள்ளைகள் நடப்பட்டுள்ளன என்று மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அவற்றுக்குப் பாதுகாப்புக் கூடுகளும் அமைக்கப்பட்டுள்ளன. கரையோரப் பகுதியில் உவர் நிலப் பிரதேசத்தில் தென்னங் கன்றுகள் விரைவாக வளரும் என்பதால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிலும் தென்னங் கன்றுகள் கரையோரப் பிரதேசத்தில் நடத்தப்படவுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related posts:
காட்டு யானைகளின் பாதுகாப்புக்காக புகையிரதங்களுக்கு வேகக்கட்டுப்பாடு!
டொலர் கையிருப்பு குறைவடைவு - டொலருக்கு பதிலாக இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அவதானம்!
அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 55,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவி...
|
|
|


