அரசாங்கத்தை எவராலும் விழ்த்திவிட முடியாது – அமைச்சர் ராஜித!
Sunday, January 1st, 2017
அரசாங்கத்தை கவிழ்க்க போவதாக வெளியிடப்படும் கருத்துக்கள் கனவு மாத்திரமே. நல்லாட்சி அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மத்துகம கடுகஹஹேன பிரதேசத்தில் வைத்தியசாலை ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜனாதிபதியும் பிரதமரும் மிகவும் தூர நோக்கு கொண்டு செயற்பட்டு வருகின்றனர். சில அரசியல்வாதிகள் பழைய நிலைப்பாட்டின் அடிப்படையில் செயற்பட்டாலும், சிரேஷ்ட அமைச்சர்கள் அரசாங்கத்தை பாதுகாக்க தொடர்ந்தும் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Related posts:
பாம்புக்கடிக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி!
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வுகளில் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி பங்கேற்பு – 24 ஆம் திகதியன்று உ...
அரச பாடசாலைகளில் 2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களுக்கு விண்ணப்பம் கோரல்!
|
|
|


