குப்பைகள் தொடர்பில் வவுனியா நகரசபை உடனடியாக கவனம் செலுத்தவேண்டும்  என மக்கள் கோரிக்கை!

Saturday, December 24th, 2016

வவுனியா நகரசபை எல்லைக்குட்பட்ட தாண்டிக்குளத்தில் இருந்து சாஸ்திரி கூழாங்குளம் செல்லும் வீதியோரத்தில் கழிவுகள் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளமையால் போக்குவரத்து செய்பவர்கள் பல்வேறு அசௌகரியங்களை  எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீதியில் காணப்படும் நீர் பாய்ந்து ஓடும் பகுதியில் வீட்டு கழிவுகள் குப்பைகள் கொட்டப்பட்டு அவை குப்பை மேடாக காணப்படுவதாக கூறப்படுகின்றது. இந்த பகுதியில் கழிவுகள் நிரம்பி காணப்படுவதால் துர்நாற்றம்  வீசத்தொடங்கியுள்ளதுடன் அவை காற்று மற்றும் விலங்குகளால் அருகில் உள்ள மக்கள் குடியிருப்புகளுக்குள் எடுத்துச்செல்லப்படுவதாக  தெரியவந்துள்ளது. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்..

இந்த குப்பைகள் தொடர்பில் வவுனியா நகரசபை உடனடியாக கவனம் செலுத்த  வேண்டும்  என மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

20150907_092630



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106