யாழ்.மாநகர சபையின் பெண் அதிகாரியால் ரூ.28லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் கண்டறிவு!

Wednesday, December 7th, 2016

யாழ்ப்பாணம் மாநகர சபையில் பெண் ஊழியரால் மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடித் தொகையானது ஆரம்ப விசாரணைகளில் 28லட்சம் ரூபா என்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபையின் திட்டமிடல் பிரிவில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் சுமார் 17லட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டமை கண்டறியப்பட்டு, ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு, பொலிஸ் நிலையத்திலும் முறையிடப்பட்டது. அதன் பிரகாரம் குறித்த பெண் ஊழியர் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டு, ஆரம்ப கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு கணக்குகளும் பரீசிலிக்கப்பட்டன.

இதன்போதே அந்தப் பெண் ஊழியரினால் 28லட்சம் ரூபா மோசடி செய்தமை கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு கண்டறியப்பட்ட 28லட்சம் ரூபா மோசடி தொடர்பில் குற்றப்பகிர்வுப் பத்திரம் தயாரிக்கப்பட்டு அடுத்தகட்ட விசாணைகள் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக பொலிஸாரிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் மிக ஆமை வேகத்திலேயே நகர்வதாக அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

Jaffna-MC-Logo

Related posts:

முன்னாள் போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் றெமீடியஸ் உதவ...
விஜேதாஸ ராஜபக்ஷ - ஜுலி சங்கிற்கும் இடையில் சந்திப்பு - நாட்டின் தற்போதைய பொருளதார மற்றும் அரசியல் நி...
நான்கு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் விசேட கவனம் செலுத்துமாறு விசேட வைத்திய நிபுணர் தீபால் ...