விவசாயிகளுக்கான உரமானியம் இரண்டுவாரங்களில் – இராஜாங்க அமைச்சர் வசந்த அளுவிகாரை!
Tuesday, December 6th, 2016
விவசாயிகளுக்கான உரமானிய நிவாரணத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இரண்டு வாரத்திற்குள் வைப்பீடு செய்யப்படும் என்று விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் வசந்த அளுவிகாரை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று பாராளுமன்ற எதிர்க்கட்சி கொறடாவும் ஜே.வி.பி. உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார். அவர் மேலும் தொடர்ந்து பதிலளிக்கையில் போதியளவிலான மழை வீழ்ச்சி இல்லாமையினாலேயே விவசாய நடவடிக்கையில் தாமதம் அடைந்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

Related posts:
போர்க்குற்ற விசாரணை தொடர்பில் மாற்றம் இல்லை- ஐ.நா!
சவுதி அரேபிய தொழில் சந்தையில் இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு - அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீர...
ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சும் அரச பொறிமுறையை நிறுத்து - இலங்கை வங்கி ஊழியர்கள் யாழ்ப்பாணத்தில் போரட்...
|
|
|


