தமிழகத்தில் இதுவரை 22 கோடி ரூபாய் பறிமுதல்- தேர்தல் ஆணையம்
Wednesday, April 13th, 2016
தமிழகத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை சுமார் 22 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தேர்தல் நன்னடத்தை விதிகளின் படி இதுவரை விளம்பரம் தொடர்பாக 2.91 லட்சம் புகார்கள் பெறப்பட்டதாகவும் இதில் 2.83 லட்சம் புகார்களுக்கான விளம்பரங்கள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 1277 வழக்குகளும், வாகனங்களில் அனுமதியில்லாமல் விளம்பரம் மேற்கொண்டதாக 1028 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது
11-ஆம் தேதி வரை நிலையான கண்காணிப்புக் குழுவினர் மூலம் சுமார் 13 கோடி ரூபாயும், பறக்கும் படை மூலம் சுமார் 9 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சிறுவர்களை விட அதிக நேரம் உழைக்கும் சிறுமிகள்: சொல்கிறது ஐ.நா. அறிக்கை!
அமெரிக்காவை எச்சரிக்கும் விளாடிமிர் புடின் !
தேவையற்ற அனைத்து நடவடிக்கைகளையும் இடைநிறுத்த தீர்மானம்...!
|
|
|


