சிகரெட் விற்பனையால் வரி வருமானம் வீழ்ச்சி!
Sunday, November 27th, 2016
சிகரெட் விலையை உயர்த்தியதன் பின்னர் சிகரெட் விற்பனை வருமான வரி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இதனடிப்படையில் சுமார் 200 கோடி ரூபா மாதாந்த வரி வருமானம் இழக்கப்பட்டுள்ளதாக திறைசேரி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சிகரெட் விலை உயர்த்தப்பட முன்னதாக மாதாந்த வரி வருமானம் 800 கோடி ரூபாவாக காணப்பட்டது. தற்போது இந்தத் தொகை 600 கோடி ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அத்துடன், தற்போது வருடாந்தம் சிகரெட் விற்பனை ஊடாக அரசாங்கம் 9600 கோடி ரூபா வருமானம் ஈட்டுகின்றது. இந்தத் தொகை இனி வரும் காலங்களில் 7200 கோடி ரூபாவாக வீழ்ச்சியடையும் என தெரிவிக்கப்படுகிறது. விலை ஏற்றத்தின் பின்னர் சிகரெட் விற்பனை 15 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
Related posts:
காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் அரச பகுப்பாய்வுக்கு!
20 ஆவது திருத்தம் திருத்தங்களுடன் நீதி அமைச்சரால் முன்வைப்பு – நாடாளுமன்றில் கடும் வாதப் பிரதிவாதம்!
மண்டைதீவு புதைகுழி வழக்கு - அறிக்கையை மீண்டும் நாளை சமர்பிக்குமாறு மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாருக்க...
|
|
|
நாட்டின் பசுமை சக்தி உற்பத்தித் தேவைக்கு வடக்கு மாகாணம் பங்களிக்கும் – யாழ் மாவட்ட கல்விமான்கள் சந்த...
பொருளாதார சிக்கல்களில் இருந்து நாடு விடுபட அனைவரது பங்களிப்பும் அவசியம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்...
இருபது இலட்சத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்களை அடுத்த மூன்று மாதங்களுக்குள் இரத்துச் செய்ய...


