வீட்டிலிருந்த யுவதி மீது தாக்குதல்!
Saturday, November 26th, 2016
நாவாந்துறை கண்ணாபுரம் பகுதியில் வீட்டிலிருந்த யுவதி மீது 8பேர் சேர்ந்து தாக்கியதில் காயங்களுக்குள்ளான யுவதி யாழ்.போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தில் 29 வயதுடைய யுவதி ஒருவரே காயமடைந்தவராவார். திங்கட்கிழமை காலை மேற்படி யுவதியின் வீட்டிற்குச் சென்ற 8பேர் யுவதி மீது கல்லாலும் கையாலும் தாக்கியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் 8பேரின் பெயர்களை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார். இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts:
தவறிழைத்த மாணவர் தொடர்பில் மாணவர்களுக்கு விடுகைப்பத்திரம் வழங்குவது வரம்பு மீறலாகும் - இலங்கை மனித உ...
ஐக்கிய நாடுகளின் மூலதன நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக கலாநிதி பிரதீப் குருகுலசூரிய நியமனம்!
நாளைமுதல் காலாவதியாகவுள்ள இலங்கை கடவுச்சீட்டுகளுக்கு ஒருவருடகால சலுகை - குடிவரவு மற்றும் குடியகல்வு ...
|
|
|


