வெற்றிடமாகவுள்ள தபாலதிபர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை!
Tuesday, November 22nd, 2016
யாழ். பிரதம தபாலக அஞ்சல் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் 49 தபாலதிபர்களுக்கான பயிற்சிகள் எதிர்வரும்-25 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. பயிற்சி நெறியின் முடிவில் தரம் மூன்றைச் சேர்ந்த தபாலதிபர்கள் வெற்றிடமாகவுள்ள தபாலகங்களுக்கு நியமனம் பெற்றுச் செல்லவுள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் 355 தபாலதிபர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் மூன்றாம் தரத் தபாலதிபர்கள் தபால் பயிற்சிக் கல்லூரிகளில் இடம்பெறுகின்ற மூன்று வாரப் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts:
மீளவும் மத்தள விமான நிலைய செயற்பாடுகளை !
கல்வித்துறை மறுசீரமைக்கப்படாவிட்டால், மாணவர்கள் உயர் கல்வியை விட்டு விலகி வேறு வழிகளில் ஈடுபடுவதை தவ...
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச சமூகம் நம்பிக்கை - அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!
|
|
|


