போலிச் செய்திகளைத் தடுக்க பேஸ்புக் நடவடிக்கை!
Monday, November 21st, 2016
பேஸ்புக் இணைய தளத்தில் போலி செய்திகள் பிரசுரிக்கப்படுவதைத் தடுக்கும் வண்ணம் அவற்றைப் பட்டியலிடும் புதிய வழிமுறைகளை பேஸ்புக் உருவாக்கிவருவதாக மார்க் ஸுக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.
தகவல்களின் உண்மைத்தன்மையை பரிசோதிக்கும் நிறுவனங்கள் ஏற்கனவே இருக்கும் நிலையில், அவைகளுடன் இணைந்து பேஸ்புக் பணியாற்றலாம் என்று அவர் கூறியிருக்கிறார் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னர், போலி செய்திகள் வெளியிடப்படுவதாக பேஸ்புக் ஏற்கனவே விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. இந்த போலிச் செய்திகள் அதிபர் தேர்தலின் முடிவை மாற்றியிருக்கலாம் என்று சிலரால் நம்பப்படுகிறது.

Related posts:
உணர்ச்சியை அடக்க முடியாமல் கதறி அழுத அகதி சிறுவன்: நெஞ்சை உருக்கும் மற்றொரு புகைப்படம்!
ஒரே நாளில் நிகழவிருக்கும் மூன்று விண்வெளி அதிசயம்!
கூகுளில் வரும் அதிரடி மாற்றம்!
|
|
|


