அதிவேக நெடுஞ்சாலையில் செல்லும் சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!
Thursday, November 17th, 2016
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று(17) காலைமுதல் அதிக பனி மூட்டமான காலநிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தெற்கு அதிகவேக வீதியின் தொடங்கொடையில் இருந்து கெலதிகம வரையிலும், கொட்டாவ பகுதி பிரதேசத்திலும் இவ்வாறு பனி மூட்டம் காணப்படுகிறது.
வீதி பனி மூட்டத்தினால் மூடப்பட்டுள்ளதாகவும், விபத்துக்களை தவிர்ப்பதற்கு வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துமாறும் வாகன சாரதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் வாகனத்தை செலுத்துமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக அதிவேக வீதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts:
குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் பாவனைக்கு உகந்ததாக இல்லை – பிரதேச மக்கள் குற்றச்சாட்டு!
வைத்தியசாலைகளுக்கு தேவையான உபகரணங்களை பெற்றுக்கொள்ள உதவுங்கள் - இலங்கையின் செல்வந்தர்களிடம் இராஜாங்க...
சீனாவுக்கான பயணத்தை ஒத்திவைகும் ட்ரம்ப்!
|
|
|


