பொலிஸ்மா அதிபர் இளங்ககோனுக்கு ஜனாதிபதி வாழ்த்து
Friday, April 8th, 2016
அண்மைக் காலங்களில் பதவி வகித்த பொலிஸ்மா அதிபர்கள் அனைவருக்கும் முன்மாதிரியான பொலிஸ்மா அதிபராக என்.கே.இளங்ககோன் பணியாற்றினார் என்பதுடன் அவர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று முற்பகல்(7) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதியை சந்தித்த பொலிஸ்மா அதிபர் தனது ஓய்வு பெறுதல் தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
சுமார் ஐந்தாண்டு காலம் பொலிஸ்மா அதிபராக பணியாற்றிய இவருக்கு ஜனாதிபதி இதன் போது வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன், 33 ஆவது பொலிஸ்மா அதிபராக சேவையாற்றிய என்.கே.இளங்ககோன் எதிர்வரும் 11ஆம் திகதி உத்தியோகபூர்வமாக பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நவம்பரில்!
பிரதமர் மஹிந்த ராஜபக்ச - இந்திய வெளிவிவகார செயலாளர் விசேட சந்திப்பு! – இரு நாடுகளுக்கும் இடையிலான நீ...
வருடாந்த வட்டி வீதம் குறைந்தபட்சம் 09 வீதமாக தொடர்ந்தும் பேணுவதற்கு ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தில்...
|
|
|
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரச அனுசரணைகளுடன் இரண்டுவகை வீட்டுத்திட்டங்களை அமைக்கும் பிரதமர் மஹிந...
இலங்கையின் கப்பல் போக்குவரத்து துறை அபிவிருத்திக்கு உதவி வழங்க தயார் - பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல்...
அரசாங்க சேவையில் நிலவும் சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் வகையில் பொறிமுறையொன்றை - சுற்றறிக்கையொன்றை வெள...


