தீவகத்தில் நெற்செய்கையை பாதுகாப்பதற்கு முட்கம்பிகள் – விவசாயத் திணைக்களம் வழங்கியது!
Thursday, November 10th, 2016
கட்டாக்காலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையால் தீவகத்தில் வீழ்ச்சியடைந்துள்ள நெற்செய்கையை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு முட்கம்பிகள் வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்தது..
நெற்செய்கையைப் பாதுகாக்கும் பொருட்டு விவசாயத் திணைக்கத்தின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து ஒரு மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 223 முட்கம்பிச் சுருள்கள் கொள்வனவு செய்யப்பட்டன. புங்குடுதீவு கமநல சேவைகள் நிலையத்தில் தெரிவு செய்யப்பட்ட 55 விவசாயிகளுக்கு தலா 25கிலோ எடையுடைய 171 முட்கம்பிச் சுருள்கள் வழங்கப்பட்டன. ஏனைய முட்கம்பிச் சுருள்கள் தெரிவு அடிப்படையில் விவசாயிகளுக்கு பகிரப்படும் – என்று விவசாயத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்

Related posts:
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகள் அதிகரிப்பதற்கு நடவடிக்கை!
ஸ்கொட்லாந்து சென்றடைந்தார் ஜனாதிபதி - ஐ.நா சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு இன்றுமுதல் ஆரம்பம...
எரிபொருள் பௌசர்கள் மற்றும் ரயில்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் கஞ்சன விஜேசேக...
|
|
|


