அரச தொழில் அதிகாரிகள் சங்கம் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு!

Wednesday, November 2nd, 2016

தமது கோரிக்கைகள் பலவற்றுக்கு தீர்வு காணப்படாமையினால் அரச சேவை தொழில் அதிகாரிகள் சங்கம் இன்று (02) முதல் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஐ.சீ. கமககே தெரிவித்துள்ளார்.

சேவை யாப்பு தயாரித்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுத்தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடாத்தியும் தீர்வு கிட்டாததனால் மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் ஐ.சீ. கமககே தெரிவித்துள்ளார்.

முன்னர் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் அதிகாரிகளின் வாக்குறுதியினால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அவ்வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததனால் இன்று முதல் மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

on-strike-415x260 copy

Related posts:

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி - நள்ளிரவுமுதல் பேருந்து கட்டணம் 19.5 சதவீதத்தால் அதிகரிப்பு!
மகளிர் தினத்தை ஒரு தினத்திற்கு மட்டுப்படுத்தாமல் அதனை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை...
நாட்டைப் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் வேளையில் சிலர் அதனைச் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் - ஜ...

பொருளாதார நெருக்கடிக்கு கொரோனாவே முக்கிய காரணம் - நாட்டை முடக்காவிட்டால் பொருளாதார நெருக்கடியில் இரு...
நாளைமுதல் வடக்கு, உள்ளிட்ட 4 மாகாணங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை - கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்...
தகுதி பெற்று, வங்கிக் கணக்கைத் திறக்காதவர்களை கணக்குகளை விரைவில் திறக்குமாறு அறிவுறுத்து!