பொம்மை வெளி வாய்க்கால் சீரமைப்பு!
Monday, October 31st, 2016
பொம்மை வெளியில் வெள்ளம் வழிந்தோட வசதியாக அராலி வீதியிலுள்ள வெள்ள வாய்க்காலை சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யாழ்.மாநகராட்சி மன்றம் நீண்ட நாட்களின் பின்னர் இந்த வெள்ள வாய்க்காலை துப்பரவாக்கி சீரமைக்கும் பணிகளை முன்னெடுத்துள்ளது. இந்தப் பகுதியில் வெள்ளம் வாய்க்காலுக்கு வழிந்தோட வசதியாக, வெள்ளம் தள்ளி, என்று கூறப்படும் இந்த வாய்க்கால் புனரமைக்கப்பட்டு வருகின்றது என்று மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார். இந்த வெள்ளம் தள்ளி வாய்க்கால்கள் பல நாட்களாக திருத்தம் செய்யப்படாமல் இருந்தன. தற்போது மாநகர தொழிலாளர்கள் இந்த வாய்க்காலைச் சீரமைத்துள்ளனர்.

Related posts:
தரம் 5 புலமைபரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்குமேல் பெற்றமாணவர்களுக்கு கௌரவிப்பு!
பேருந்து சேவை இல்லை: மாணவர்கள் பெரும் சிரமம்!
நலன்புரி உதவிகள் வழங்குவதற்கான காலம் நீடிப்பு - ஜனாதிபதியால் விசேட வர்த்தமானியும் வெளியீடு!
|
|
|


