நைஜீரியாவில் தற்கொலை தாக்குதல்: 9 பேர் பலி!
Sunday, October 30th, 2016
நையீரியாவின் வட பகுதி நகரான மய்துகுரியில் தற்கொலை குண்டுதாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக நைஜீரிய ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நடத்தப்பட்டுள்ள இரட்டை தற்கொலை தாக்குதல்களில் 20-க்கு மேலானோர் காயமடைந்துள்ளனர்.மக்கள் இடம்பெயர்ந்து வாழுகின்ற ஒரு முகாமிற்கு வெளியே அதிகாலையில் முதல் தாக்குதல் நடத்தப்பட்டது.
அடுதுது உடனடியாக ஒரு எரிபொருள் டிப்போவை இலக்காக வைத்து இரண்டாவது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.போகோ ஹாராம் இஸ்லாமியவாத குழுவினர் சமீப காலமாக நைஜீரியாவின் வட பகுதியில் தாக்குதல்களை அதிகரித்துள்ளனர்.

Related posts:
அமெரிக்கா – சவுதி இடையில் 100 பில்லியன் டொலர்கள் உடன்படிக்கை !
அமெரிக்க பொருட்களுக்கு வரியை அதிகரித்தது கனடா!
தனிநபர்கள் உட்பட 200 வணிக நிறுவனங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தடை விதிப்பு!
|
|
|


