பெறுமதி வாய்ந்த மரக்குற்றிகள் பொலிஸாரால் மீட்பு!
Saturday, October 29th, 2016
கிளிநொச்சி, அக்கராயன்குளம் பொலிஸ் காவல் பிரிவினரால் பெறுமதி வாய்ந்த மரக்குற்றிகள் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளன.
வன்னேரிக்குளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட போதே குறித்த மரக்குற்றிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற பார ஊர்தியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. விசாரணைகளின் பின்னர் கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts:
வரலாற்று பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய புனித்தன்மை அழிக்கப்படுகின்றது - பூசகர...
இறக்குமதி உருளைக்கிழங்கு மீதான விசேட பொருட்களுக்கான சுங்க வரி ரூ. 50 ஆக அதிகரிப்பு!
ஜனநாயக போராட்டங்களுக்கு செவிசாய்க்க அரசாங்கம் தயார் - தீவிரவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது – பிரதமர் த...
|
|
|


