ஓய்வு பெறும் வயது எல்லையை 65 ஆக உயர்த்துமாறு கோரிக்கை!
Saturday, October 29th, 2016
இலங்கையில் ஓய்வு பெற்றுக்கொள்ளும் வயது எல்லையை 65 ஆக உயர்த்துமாறு ஜாதிக சேவக சங்கமய என்னும் தொழிற்சங்கம் கோரியுள்ளது.
நிதி அமைச்சிடம் தொழிற்சங்கம் உத்தியோகபூர்வமாக இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றி வருவோரின் ஓய்வு பெறும் வயது எல்லையை 65 ஆக உயர்த்துமாறு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் எழுத்து மூலம் கோரப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட உள்ள நிவாரணங்கள் தொடர்பில் தொழிற்சங்கம், பிரதமர் மற்றும் நிதி அமைச்சருடன் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது ஓய்வு பெறும் வயது எல்லையை 65 ஆக உயர்த்துமாறு கோரப்பட்டுள்ளது.

Related posts:
இலங்கை வரலாற்றில் உருவாகிய அரசாங்கங்களில் இதுவே மிகவும் பலமான அரசாங்கம் – ஜனாதிபதி கோட்டாபயவுக்கு கல...
22 ஆம் திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் சவால் - நாடாளுமன்றை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஆ...
நாட்டில் மீண்டும் போராட்டம் முன்னெடுப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது - பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் ...
|
|
|


