தமிழில் பதில் கடிதம் அனுப்பினார் ஆளுநர் !

Thursday, October 27th, 2016

வடக்கு மாகாண ஆளுநர் சிங்கள மொழியில் அனுப்பிய கடிதத்தை மாணவர்கள் திருப்பி அனுப்பியயிருந்த நிலையில், குறித்த கடிதத்தை ஆளுநர் இன்று தமிழில் மொழிபெயர்த்து அனுப்பி வைத்துள்ளார்.

யாழ்ப்பாணம் – குளப்பிட்டி பகுதியில் மரணமடைந்த இரு இளைஞர்களினதும் மரணத்திற்கு உரிய தீர்வை முன்னெடுக்குமாறு கோரி கடந்த திங்கட்கிழமை யாழ் மாணவர்கள் ஒன்றிணைந்து ஆளுநரின் அலுவலகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்கள்.

இதில், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான மகஜர் ஒன்றினை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என் வேதநாயகம் மற்றும் ஆளுநரின் செயலாளரிடமும் மாணவர்கள் கையளித்தார்கள்.குறித்த அறிக்கைக்கு வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சிங்கள மொழியில் பதில் கடிதத்தை நேற்று அனுப்பி வைத்திருந்தார்.

இந்தக் கடிதத்தை தம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை எனக் குறிப்பிட்டு யாழ்.மாணவர்கள் ஆளுநருக்கே திருப்பி அனுப்பி வைத்துள்ளார்கள்.இவ்வாறிருக்க இன்று வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே அந்தக் கடிதத்தை தமிழில் மொழி பெயர்த்து அனுப்பியுள்ளார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts:

துப்பரவு செய்யப்படாத காணிகளுக்கு விரைவில் தண்டப்பணம் அறவிடப்படும் – வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுர...
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நாளை மறுதினம் – அமைதிக் காலத்தில் சட்டவிரோத செயல் ம...
மக்களை பாதுகாப்பதற்கே அரசு முன்னுரிமை வழங்குகிறது - பிரதமர் மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டு!