இலங்கையர்களின் வருமானத்தை 8000 டொலராக மாற்ற நடவடிக்கை!
Thursday, October 27th, 2016
நாட்டு மக்களின் வருமான நிலையை மிக விரைவில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அதன்படி 4000 டொலராக உள்ள தனிநபர் வருமானத்தை 8000 டொலர் வரையில் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேணடும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.தற்போது எங்கள் நாட்டின் பொருளாதாரம் வருடத்திற்கு 5 வீதம் என்ற வேகத்திலேயே வளர்ச்சியடைகின்றது. இதே வேகத்தில் சென்றால் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு 2033ஆம் ஆண்டு வரை செல்ல வேண்டும்.
எங்களுக்கு வருடத்திற்கு 7 வீதம் என்ற வளர்ச்சியை கொண்டு வர முடியும் என்றால், ஒரு நபரின் வருமானத்தை 2025ஆம் ஆண்டிற்குள் இரட்டிப்பாக்கிக் கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:
இடியுடன் கூடிய மழை, பலமான காற்று, கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர...
நெருக்கடிகளால் நாடு நிறைந்திருப்பது தெரிந்தே நாட்டை பொறுப்பேற்றேன் - நாட்டை நிச்சயம் மீட்டெடுத்தே தீ...
பெரும்போக நெற் செய்கைக்கு 3 மாதங்களில் 3 ஆயிரத்து 559 பவுசர் எரிபொருள் பகிர்ந்தளிப்பு - விவசாய அமைச்...
|
|
|


