மாநகரப் பகுதியில் அடுத்த ஆண்டு பல வீதிகள் புனரமைக்கப்படும் – மாநகர ஆணையாளர் வாகீசன் !
Thursday, October 27th, 2016
மாநகர அபிவிருத்தி திட்டத்தில் வீதிகள் புனரமைப்பதற்கு கூடுதலாக கவனம் செலுத்தப்படவுள்ளதால் யாழ்.மாநகரப் பகுதியில் அடுத்த ஆண்டு பல வீதிகள் புனரமைக்கப்படவுள்ளதாக மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார்.
தற்போது மாநகரப் பகுதியில் முக்கிய வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. கரையோர பகுதியிலும் அனேகமான வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டின் அபிவிருத்தித் திட்டத்தில் கூடுதலான வீதிகள் புனரமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனைவிட சேதமடைந்த வடிகால் வாய்க்காலும் சீர் செய்யப்படும். வீதி புனரமைப்பு தொடர்பாக குழுவும் அமைக்கப்படும் என்றார்.

Related posts:
பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் !
இடைநிறுத்திய பணி இன்றுமுதல் மீண்டும் முன்னெடுக்கின்றது – துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு எ...
மேலும் ஒருவாரத்திற்கு பாடசாலைகள் மூடப்படும் - கல்வி அமைச்சர் அறிவிப்பு!
|
|
|


