மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான கோப் குழுவின் அறிக்கை இன்று!
Tuesday, October 25th, 2016
இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி வழங்கலில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி குற்றச்சாட்டு சம்பந்தப்பட்ட கோப் குழுவின் அறிக்கை இன்றைய தினம் பாராளுமன்றத்தில் சமர்ப் பிக்கப்படவுள்ளது.
பிணைமுறி விவகாரம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கோப் குழு கூடியது. இதன்போது பெரும் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டன.
இந்நிலையில் பிணைமுறி விவகாரம் தொடர்பில் வெவ்வேறு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.எனினும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான முக்கிய அறிக்கை இன்றைய தினம் கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமுமில்லை!
வடக்கில் இவ்வருடம் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நேரத்தில் உரங்களை வழங...
குழந்தைகளின் கல்வியறிவு மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கு 1,060 கோடி ரூபாவை வழங்குகின்றது அமெரிக...
|
|
|


