யாழ். பல்கலை மாணவர் படுகொலை:உண்மையைக் கண்டறியும் விசேட அதிகாரிகள் குழு யாழ். வருகை!
Tuesday, October 25th, 2016
யாழ். பல்கலைக் கழக மாணவர்கள் இருவர் கடந்த புதன்கிழமை(20) இரவு கொக்குவில் குளப்பிட்டிச் சந்திக்கருகாமையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலியான சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக உண்மையைக் கண்டறியும் விசேட அதிகாரிகள் குழுவொன்று நேற்றுச் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளது.
குறித்த குழுவினர் நேற்றுப் பிற்பகல் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்குச் சென்று நிலைமைகளை நேரில் ஆராய்ந்தனர். மாணவர்களின் படுகொலை தொடர்பாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு மேலதிகமாக உண்மையைக் கண்டறியும் குழுவின் விசாரணை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
விவசாயிகளுக்கு கடன் வழங்க தீர்மானம் - பிரதமர் அலுவலகம் அறிவிப்பு!
தொழில் திறன் நிறைந்த ஊடகத் தொழிலை உருவாக்க 'ஊடகக் கற்கை நிறுவனம் - அமைச்சில் அமைச்சர் கெஹலிய ரம்புக்...
எதிர்வரும் 30 ஆம் திகதி மின் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் - பொதுப்பயன்பாடுகள் ஆணைக்க...
|
|
|


