வெளியேற்றப்படும் குப்பைகள் தொடர்பில் விரைவில் சுற்றுநிருபம்!
Friday, October 21st, 2016
அரச நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் தரம் பிரித்து வெளியேற்றுவது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்படவுள்ளதுடன் எதிர்வரும் முதலாம் திகதிமுதல் குறித்த சுற்றுநிருபம் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
வகைப்படுத்தப்படாத குப்பைகள் உள்ளூராட்சி சபைகளால் ஏற்றுகொள்ளப்படாத புதிய நடைமுறை தொடர்பில் தெளிவூட்டும் நிகழ்வு நேற்று(20) உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போது அவர் மேற்குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில், பெருந்தெருக்கள் அருகில் குப்பைகளை வீசுபவர்களுக்கு எதிராக, பொதுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தல் என்ற சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் பைசர் முஸ்தபா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:
நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு வலியுறுத்தல்!
குளவி கொட்டி கர்ப்பிணி பெண் பலி – யாழ்ப்பாணததில் துயரம்!
சர்வதேச அளவில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும்போது ஒரே குரலில் ஒன்றுபட வேண்டும் – அமைச்சர் தினேஷ்...
|
|
|


