அக்கரப்பத்தனையில் மினிசூறாவளி – வீடுகள் சேதம்

Sunday, April 3rd, 2016

அக்கரப்பத்தனை சென் ஜோர்ஜ் தோட்டத்தில் நேற்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை ஏற்பட்ட பலத்த காற்றுடன் கூடிய அடைமழையினால் வீடுகள் சிலவற்றின் கூரைகள் காற்றினால் அள்ளுண்டுச் சென்றுள்ளன.

அக்கரப்பத்தனை சென் ஜோர்ஜ் தோட்டத்திலுள்ள இரண்டு வீடுகளின் கூரைகள் முழுமையாக காற்றினால் அள்ளுண்டு சென்றதால் இரண்டு குடும்பங்களைச்சேர்ந்த ஆறு பேர் பாதிப்படைந்துள்ளனர்.

அத்தோடு மரங்களும் முறிந்து விழுந்துள்ளது. மேற்படி கூரைகள் காற்றினால் அள்ளுண்டு அப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் சிக்கியதால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் உறவினர்களின் வீட்டில் தற்காலிக தங்கவைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தோட்ட நிர்வாகமும், நுவரெலியா பிரதேச செயலகத்தின் மூலமும் உதவிகளை வழங்குவதற்கு தோட்ட உதவி அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts: