இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தின் 150ஆவது பொலிஸ் தின நிறைவு நாள் நிகழ்வுகள்!
Saturday, October 15th, 2016
இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தின் 150ஆவது பொலிஸ் தின நிறைவு நாள் நிகழ்வுகள் நேற்று (14) காலை இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தலைமையில் யாழ். கோட்டைக்குமுன்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். தேசியக் கொடியினை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையினைப் பொலிஸ்மா அதிபர் ஏற்றுக் கொண்டார்.


Related posts:
சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பு!
கடனை திருப்பிச் செலுத்த இலங்கைக்கு அவகாசம் - இந்திய தூதரகம் அறிவிப்பு!
இரண்டு ஆண்டுகளில் 107 புதிய சட்டமூலங்கள் - கைதிகளின் உழைப்புடன் 116 மில்லியன் வருமானம் - இராஜாங்க ...
|
|
|


