வட்டுக் கோட்டையில் ஆயிரம் கிலோக் கிராம் கஞ்சாவுடன் கைதானவருக்கு விளக்கமறியல்!
Friday, October 14th, 2016
யாழ்ப்பாணம் வட்டுக் கோட்டையில் ஆயிரம் மில்லிக் கிராம் கஞ்சாவுடன் கைதான சந்தேகநபரை எதிர்வரும்-25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் கடந்த செவ்வாய்க்கிழமை(11) உத்தரவு பிறப்பித்தார்.
கடந்த திங்கட்கிழமை இரவு யாழ். வட்டுக் கோட்டைப் பகுதியில் வீதி ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பிரதேசப் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நபரொருவரைச் சோதனையிட்டனர். அப்போது குறித்த சந்தேகநபரிடமிருந்து ஆயிரம் மில்லிக் கிராம் கஞ்சாவினை வட்டுக் கோட்டைப் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
இவ்வாறான நிலையில் சந்தேகநபரை நேற்று முன்தினம் மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்திய போது நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.

Related posts:
இலங்கையின் இயற்கை அழகுகளை சித்தரிக்கும் முத்திரைகள் வெளீயீடு!
இ.போ.ச. 749 வழி இலக்க பேருந்துச் சேவை நிறுத்தம் - மக்கள் குற்றச்சாட்டு!
தேசிய கொள்கை ஒன்றின் ஊடாக நாட்டை கட்டியெழுப்புவதற்கு சகல அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் பகிரங...
|
|
|


