குடும்பப் பிணக்கு: புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி மரணம்!
Thursday, October 13th, 2016
குடும்பப் பிணக்குக் காரணமாகப் புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்று காயமடைந்திருந்த திருநெல்வேலி வளாக வீதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி) யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
மது போதைப் பாவனைக்கு அடிமையாகியிருந்த குறித்த குடும்பஸ்தர் ஏற்கனவே யாழ். போதான வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை குறித்த குடும்பஸ்தர் யாழ். போதனா வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்று யாழ். புங்கன்குளம் பகுதியில் புகையிரதம் முன் பாய்ந்த காரணத்தால் படுகாயமடைந்தார். இதனையடுத்துச் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்தார்.

Related posts:
இலங்கையை பொருளாதார கேந்திர நிலையமாக மாற்றுவதற்கு சீனா பங்களிப்பு!
நாட்டின் ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத் துறையை மீட்டெடுப்பது குறித்து விசேட நடவடிக்கை - இராஜாங்க அமைச்ச...
இந்தியாவிலிருந்து 30 ஆம் திகதி நாடு திரும்பும் முன்னாள் ஜனாதிபதி ரணில்!
|
|
|


