நிதியமைச்சர் உள்ளிட்ட 14 பேருக்கு மீண்டும் நீதிமன்று அழைப்பாணை!
Wednesday, October 12th, 2016
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 14 பேரை எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதுடன் குறித்த மனுவில் நிதியமைச்சின் செயலாளர் மற்றும் சுங்க பணிப்பாளர் நாயகம் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வருட ஆரம்பத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது பியர் நிறுவனமொன்றின் வரி விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட மோசடியில் அரசாங்கத்துக்கு 6 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.குறித்த மனுவினை சிங்கள தேசிய முன்னணி மற்றும் ஆறு கட்சிகள் இணைந்து தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை!
நாட்டை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இலகுவில் தொற்றக்கூடிய தன்மையைக் கொண்டது - சுகாதார அமைச்சு எச்சரிக்...
பாடசாலை மாணவர்களுக்கு காலை சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் ஜனவரி 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் - கல்...
|
|
|


