ஊடக நிறுவனமொன்றிடம் நட்ட ஈடு கோரவுள்ளது மக்கள் வங்கி!
Wednesday, October 12th, 2016
போலியான செய்திகளை வெளியிட்டு நிறுவனத்தின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தியதாக சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் மீது மக்கள் வங்கி குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த ஊடக நிறுவனத்தின் ஆங்கில பத்திரிகையான சிலோன் டுடே மற்றும் சிங்கள பத்திரிகையான மவ்பிம ஆகிய பத்திரிகைகளின் ஊடாக பிரசுரிக்கப்பட்ட செய்திகள் பிழையானவை என மக்கள் வங்கி தெரித்துள்ளது.
நிறுவனத்திற்கு ஏற்பட்ட களங்கத்திற்காக குறித்த ஊடக நிறுவனம் தலா 500 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்க வேண்டுமெனக் கோரி வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு பத்திரிகையும் 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு வழங்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
ஊடகத்தில் பிரசுரமான ஆக்கங்களினால் வங்கிக்கு அவமரியாதை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
அறுவை சிகிச்சைக்கு பின் முதல் போட்டியில் களமிறங்கிய சந்திமால்!
பலத்த எதிர்பார்ப்புடன் கூடுகிறது நாடாளுமன்றம் - 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு மூன்றில் இரண்டு பெரும்பா...
நிதியுதவிகள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அடுத்த பாதீட்டில் பட்டியலிடப்படும் - பிரதமர் தினேஸ்...
|
|
|


