யாழ்ப்பாணத்தில் புதிய வகை வாழை இனம் அறிமுகம்!
Saturday, October 8th, 2016
யாழ்.மாவட்டத்தில் ஆயிரம் ஹக்ரேயருக்கு மேற்பட்ட நிலப்பரப்புகளில் புதிய வகை இனமான ஹபன்டிஸ் இன வாழை செய்கை செய்யப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் வாழைச் செய்கையில் ஏற்பட்ட வீழ்ச்சியை அடுத்தே அந்தப் புதிய இனம் செய்கை பண்ணப்பட்டுள்ளது என விவசாயத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறுப்பிட்டி, நீர்வேலி, மாசுவன், ஊரெழு, புன்னாலைக் கட்டுவான், உரும்பிராய், அச்செழு, கோப்பாய் போன்ற இடங்களில் இந்தச் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. 44 பயனாளிகளுக்கு கால் ஏக்கருக்கு சொட்டு நீர்ப்பாசனத்தின் கீழ் 50 வீத மானிய அடிப்படையில் இந்தப் புதிய ரக வழை இனக்குட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாழைச்செய்கையின் ஏற்றுமதி தொடர்பாக விவசாயப் பணிமனை தகுந்த நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளால் ஏற்படும் விபத்துக்கள் 80 சதவீதமாக அதிகரிப்பு!
அரசியல் தலையீடுகள் இன்றி திறந்த போட்டியின் மூலம் உதவி சுங்க அத்தியட்சகர்கள் சுங்க பரிசோதகர்களை இணை...
பொதுத் தேர்தல் கண்காணிப்பு கடமையில் 5000 பேர் - பெப்ரல் அமைப்பு நடவடிக்கை!
|
|
|


