சம்பள அதிகரிப்பு வழங்குவது கடினமானது : அமைச்சர் ராஜித்த சேனாரத்ன!
Wednesday, October 5th, 2016
தேயிலை மற்றும் இரப்பரின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள இந்த நெருக்கடியான காலகட்டத்தில் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவது என்பது கடினமான விடயம் தான் ஆனால் இதுதொடர்பில் முதலாளிமார் சம்மேளனமும் தொழிற்சங்கங்களும் பேசி முடிவுக்கு வரவேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Related posts:
வாழைப்பழத்தின் விலை அதிகரிப்பு!
ஜனாதிபதி தேர்தல் - அரச அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் விசே...
புதைகுழிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களே நீதி வேண்டும் என போராடுகின்றனர் - கையெழுத்து போராட்டம் க...
|
|
|


