கொகேன் வைத்திருந்த இருவர் கைது!
Wednesday, October 5th, 2016
இரண்டு கிலோகிராமுக்கும் அதிகமான கொகேன் போதைப் பொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தெஹிவளை பகுதியில் கடந்த 3ம் திகதி 24 வயதான நைஜீரியப் பிரஜை மற்றும் 53 வயதான இலங்கையர் ஒருவரும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.
இதன்போது இவர்கள் வசம் இருந்து ஒரு கிலோவுக்கும் அதிகமான கொகேன் கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி, சந்தேகநபரான நைஜீரியப் பிரஜை தங்கியிருந்த ரத்மலானை பகுதி வீட்டில் இருந்து மேலும் ஒரு கிலோவுக்கும் அதிகமான கொகேன் மீட்கப்பட்டது.
இதற்கமைய சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவேளை, எதிர்வரும் 9ம் திகதி வரை காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Related posts:
பள்ளத்தில் பேருந்து வீழ்ந்து விபத்து: 32 பேர் வைத்தியசாலையில்!
2021 ஆம் ஆண்டுக்கான கணக்குகள் இதுவரையில் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படவில்லை - அரச கணக்குகள் பற்றிய க...
மண்டைதீவு புதைகுழிக் கிணற்றை அகழ வலியுறுத்தி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு,!
|
|
|
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு – யோசனையை வ...
நாட்டின் வருமானத்தை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசையில் காத்திருக்கும் யுகம் உருவாகலாம் - ஜனாதிபத...
ஐம்பது வருடங்களுக்கு முன் பேசி தீர்த்துவைக்கப்பட்ட விடயம் தொடர்பில் தற்போது பேசவேண்டியதில்லை - கச்சத...


