கோரிக்கைகளுக்கு தீர்வு கிடையாதுவிடின் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை – பல்கலை. கல்விசாரா ஊழியர்கள்
Friday, April 1st, 2016
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்காவிட்டால், எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று(31) தங்களால் முன்னெடுக்கப்பட்ட பணிபகிஷ்கரிப்பு வெற்றியளித்துள்ளதாக இலங்கை பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழுவின் தலைவர் எட்வர்ட் மல்வத்தகே குறிப்பிட்டார்.
சகல பல்கலைக்கழகங்களினதும் செயற்பாடுகள் நேற்று பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார். இதுகுறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொகான் டி சில்வாவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது. பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை எனவும், அவற்றுக்கு தீர்வு வழங்கும் பொருட்டு ஏற்கனவே திறைசேரிக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
Related posts:
நாடாளுமன்ற தேர்தல்: யாழ் மாவட்டத்தில் 7795 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில்!
இடைக்கால கணக்கறிக்கை பிரதமரினால் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு - இன்றும் நாளையும் விவாதம்!
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து இராணுவத் தளபதியின் ஆலோசனையின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்படும்...
|
|
|
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகள் குறித்த உண்மையை ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவேன் - முன்னாள் பிரதமர்...
நவம்பரில் மட்டும் 90 எச்ஐவி தொற்று உறுதியான நபர்கள் அடையாளம் - தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் த...
நிறைவுக்கு வந்தது புங்குடுதீவு மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பாக அகழ்வு பணிகள் ...


