தாஜூதீனின் உடற்பாகங்களை தேடி திடீர் சோதனை : 26 மனித உடற்பாகங்கள் மீட்பு!
Monday, October 3rd, 2016
வசீம் தாஜூதீனின் முதலாவது பிரேத பரிசோதனையின் போது காணாமல் போன உடல் பாகங்கள் தொடர்பில் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை பரிசோதனை செய்த குற்றப் புலனாய்வு பிரிவினர் 26 மனித உடற்பாகங்களை கைப்பற்றியுள்ளனர்.
றக்பி வீரர், வசீம் தாஜூதீனின் முதலாவது பிரேத பரிசோதனையின் போது காணாமல் போன உடல் பாகங்கள் தொடர்பில் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை பரிசோதனை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை திடீர் சோதனை செய்த குற்றப் புலனாய்வு பிரிவினரும் வைத்திய நிபுணர்களும் 26 மனித உடற்பாகங்களை கைப்பற்றியுள்ளனர்.

Related posts:
பயண சீட்டின்றி பயணித்தால் 3,000 ரூபாய் தண்டப்பணம்!
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கடலில் மூழ்கி பரிதாபமாக பலி!
நாட்டின் முக்கிய வீதிகளை அபிவிருத்தி செய்ய திட்டம் - அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!
|
|
|


