மோட்டார் சைக்கிள்களை பதிவதற்கு இன்னும் 4 மாத கால அவகாசம்!
Monday, October 3rd, 2016
இதுவரையில் பதிவு செய்யப்படாதுள்ள மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கு 4 மாத கால அவகாசத்தை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வழங்கியுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி அறிவித்துள்ளார்.
குறித்த இந்த அவகாச காலம் இன்று(03) முதல் ஆரம்பமாகி எதிர்வரும் 2017 ஜனவரி வரையில் நடைமுறையில் இருக்கும் என ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் காலத்துக்குள் 450 வேகம் கொண்ட இன்ஜின்களையுடைய மோட்டார் சைக்கிள்களும் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ள அவர், பதிவு செய்வதற்குரிய சகல ஆவணங்களும் எடுத்துவரப்படல் வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களை 011-5363592 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும் எனவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் மேலும் கூறியுள்ளார்.

Related posts:
இந்திய கடன்திட்டத்தின் கீழ் கிடைக்கும் யூரியாவை பயன்படுத்தும் விதம் குறித்து கலந்துரையாடல் - விவசாய ...
இந்திய கடன் வசதியின் கீழான இறுதி எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடைந்தது!
இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்!
|
|
|


