முதியவர்களுக்கு இனி ஆடம்பர பேருந்துகள்!
Sunday, October 2nd, 2016
முதியோர்களின் நலன் கருதி அவர்களுக்கு ஆடம்பர வசதிகளுடன் கூடிய பேருந்துகளை வழங்க ஏற்பாடு செய்து கொடுக்க உள்ளதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பீ திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற தேசிய முதியோர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.முதியோர்கள் சுற்றுலா பயணங்கள் மற்றும் யாத்திரைக்கு செல்வதற்கு அவர்களுக்கு பஸ் தேவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இந்த ஆடம்பர பஸ்களை 9 மாகாணங்களுக்கும் வழங்க உள்ளதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பீ திசாநாயக்க கூறியுள்ளார்.

Related posts:
சமகால அரசியல் நிலைப்பாட்டினை தொடர்ந்தும் மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள் -ஈ.பி.டி.பியின் வடக்குமாகாணசப...
திருமலை குச்சவெளியில் அதிநவீன வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகவில் தோழர் ஸ்ராலின்!
வறிய மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நீர் கட்டணம் அதிகரிக்கப்படும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெ...
|
|
|


