பனிப்புலம் வடலியடைப்பு ஊடாகப் புதிய பேருந்து சேவை!
Saturday, October 1st, 2016
பனிப்புலம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பெருமுயற்சியால் நேற்று வெள்ளிக்கிழமை( 30) இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவை புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
காரைநகர் சாலையின் சத்தியக்காடு, பனிப்புலம், அரசடி, வடலியடைப்பு ஊடாக யாழ்ப்பாணத்திற்குச் செல்வதற்கான 782/5 இலக்க விசேட பேருந்து சேவையானது பனிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலய முன்றலில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வில் வடமாகாண இலங்கை போக்குவரத்துச் சபையின் முகாமையாளரும், காரைநகர் பேருந்து சாலை முகாமையாளரும், கோண்டாவில் பேருந்து சாலை முகாமையாளரும், பல உத்தியோகத்தர்களும் பங்குபற்றிச் சிறப்பித்தனர்.

Related posts:
நெடுந்தீவு கடலில் மீன்பிடித்த மீனவர்களுக்கு விளக்கமறியல்!
19 ஆவது திருத்தத்துடன் ஒப்பிடும் போது 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாரிய முன்னேற்றம் - அமைச்சர் வி...
போதைப்பொருளை கட்டப்படுத்த வடக்கில் களமிறக்கப்பட்டுள்ள பொலிஸாரின் மோப்ப நாய்கள்!
|
|
|


