வாக்காளர் பதிவேடு: மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்!
Friday, September 30th, 2016
இவ் ஆண்டிற்கான வாக்காளர் பதிவேடு தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாவட்ட தேர்தல் அலுவலக மட்டத்தில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.மேன்முறையீடுகள் தொடர்பான விசாரணைகள் அடுத்த மாதம் 20 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளன.
2016 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவேடுகளை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் நவம்பர் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:
உயர்தரப் பரீட்சைக்கு இரண்டாம் தடவை தோற்றும் மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!
திருமண வீட்டில் பெரும் சோகம் : 30 பேர் வைத்தியசாலையில் - ஆரையம்பதியில் சம்பவம்!
ஒமிக்ரோன் கொரோனா நாட்டில் நுழைவதைத் தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது – அமைச்சர் நாம...
|
|
|


