கசிப்புடன் ஒருவர் கைது!
Tuesday, September 27th, 2016
புன்னாலைக்கட்டுவன் மத்தாளோடைப் பகுதியிலுள்ள பற்றைக்குள் கசிப்புடன் ஒழிந்திருந்த 35 வயதுடைய நபரொருவரை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(25) சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வீதியால் பொலிஸார் சென்று கொண்டிருந்த போது அப் பகுதியிலுள்ள பற்றைக்குள் குறித்த நபர் சந்தேகத்துக்கு இடமான முறையில் ஒழிந்திருந்த நபரைக் கைது செய்தனர். சந்தேகநபரிடமிருந்து ஒரு போத்தல் கசிப்பையும் பொலிஸார் கைப்பற்றினர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related posts:
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பண்டோரா ஆவணங்கள் தொடர்பான விசாரணை குறித்து ஜனாதிபதியிடம் விளக்கம்!
முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ள தயாரிக்கப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைச்சரவை அனுமதி!
தேர்தலுக்கான நிதியை வழங்குவதற்கு உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்...
|
|
|


