தெல்லிப்பளையில் வெடிபொருட்கள் மீட்பு!
Monday, September 26th, 2016
யாழ்ப்பாணம், தெல்லிப்பளை குரும்பசிட்டி பிரதேசத்தின் பாழடைந்த கிணற்றில் இருந்து 160 குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த கிணற்றினை புனரமைப்பு செய்ய கிராமவாசிகள் சென்ற வேளையில் குண்டுகளை கண்டு பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
அதன்பின் தெல்லிப்பளை பொலிஸாரினால் நேற்று மாலை இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் விசேட பிரிவு, மற்றும் குண்டு செயலிழக்கும் பிரிவு ஆகியவை இணைந்து குண்டுகளை செயலிழக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts:
பொது இடத்தில் வைத்து புகைத்த நபருக்கு நீதிபதி கொடுத்த உத்தரவு!
இலங்கை கடற்பரப்பில் 12 இந்திய மீனவர்கள் கைது!
யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் டெங்கு தொற்று - பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரலிக்கை!
|
|
|


