இளைஞரை தாக்கிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாற்றம்!
Sunday, September 25th, 2016
ஹட்டன் நகரிலுள்ள சிகை அலங்கார நிலையத்தில் வைத்து இளைஞர் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஹட்டன் பிரதான பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு இவரை மாற்றியுள்ளதாக ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த சிகை அலங்கார நிலையத்தின் ஊழியர் ஒருவர் நேற்று தாக்கப்பட்டதாக கூறி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட இளைஞன் தொடர்ந்தும் டிக்கோயா கிழங்கன் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related posts:
இந்த ஆண்டு தேர்தல் இல்லை - ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவிப்பு!
புதிய கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் முன்னோடி வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும்...
ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் இரு சின்னங்கள் நீக்கம்!
|
|
|
20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்படும் விசேட அறிக்கை!
சட்டவிரோத மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கிச் சூடு - அரியாலை, பூம்புகாரில் பயணித்த ...
அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த இளைஞர் யுவதிகளே ஈ.பி.டி.பியின் நடைமுறைச் சாத்தியமான வழிமுறை நோக்கி அணி...


