முச்சக்கர வண்டி விபத்து:ஒருவர் படுகாயம்!
Saturday, September 24th, 2016
கிளிநொச்சி புளியம்பொக்கணை ஏ-35 வீதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியை பின்னால் வந்த கப் ரகவாகனம் மோதியதில், முச்சக்கர வண்டியைச் செலுத்திச்சென்ற மாற்றுத்திறனாளியான சாரதி படுகாமடைந்துள்ளார்.
இவ்விபத்து இன்று சனிக்கிழமை (24) மதியம் இடம்பெற்றுள்ளது.புதுக்குடியிருப்பு பகுதியலிருந்து பரந்தன் நோக்கிப்பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியை பின்னால் வந்த கப்ரக வாகனம் மோதியதில் முச்சக்கர வண்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியது.
இதன்போது முச்சக்கர வண்டியைச் செலுத்திச்சென்ற மாற்றுத்திறனாளியான சாரதி படுகாயமடைந்துள்ளதுடன் குறித்த விபத்துடன் தொடர்புபட்ட வாகனம் தப்பிச் சென்றுள்ளது. மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related posts:
தெளிவாக தெரியும் உலக முடிவிடம்!
மே தின கூட்டங்களுக்கு அனுமதி வழங்காதிருக்க தீர்மானம் - இராணுவ தளபதி அறிவிப்பு!
அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்ப...
|
|
|


